கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகா சார்பில் அதிகாரிகளின் பெயர் பரிந்துரை செய்யாத நிலையில், தற்போது காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள கர்நாடக முதலவர் இதுபற்றி கூறுகையில்..!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடு என்றும் தெரிவித்துள்ளார்.

 
Powered by Blogger.