காத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

காத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆறு அமைந்துள்ள பகுதியில் சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவரின் தலைப்பகுதியிலும் மற்றையவரின் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Powered by Blogger.