கோத்தபாய ஜனாதிபதியானால் ஒரு கடவுள்??

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.


அவர் அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முடியாது. அவர் அமெரிக்க குடிமகன் என்பதால், அதை அவர் கைவிட்டால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடமுடியும்.
அதற்கான நடைமுறைகள் உள்ளன. அவர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கோத்தபாய ராஜபக்ச இன்னமும் அதைச் செய்யவில்லை.

அந்த விண்ணப்பம் அமெரிக்காவை சென்றடைந்த பின்னர் அவர்கள் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீக்கப்படுகின்றார் என்று சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அந்த ஆவணத்தை பெறமால் கோத்தபாய ராஜபக்சவாவை ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்ககூட முடியாது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தலைவிதியுள்ளது. எதிர்காலத்தில் என்ன இடம்பெறப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். கோத்தபாய ஜனாதிபதியாகினால் நாட்டைக் கடவுளே காப்பாற்றவேண்டும்.

அரசு சிங்கள மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது என்ற கருத்துக்களை முன்வைத்து செய்தியாளர்கள் மாநாடுகளை நடத்தும் பௌத்த பிக்குகள் யாரென்று பார்த்தால் அவர்கள் கடும் போக்கு பௌத்த சிங்கள குழுக்களை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இந்தக் குழுவே கோத்தபாய ராஜபக்சவின் பின்னால் உள்ளது. என்றார். 

No comments

Powered by Blogger.