நயன்தாரா பேய் படத்தில், செல்லப் பிள்ளையான யோகி பாபு!

நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் நயன்தாராவை காதலிக்க சொல்லி, யோகி பாபு கெஞ்சுகிற மாதிரியான ‘கல்யாண வயசுதான் ஆகிருச்சு டீ’ என்ற பாடல் யூ-டியூபில் வெளியாகி மிக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் யோகி பாபுவின் நடிப்பில் சிலிர்த்த நயன்தாரா, மற்ற படங்களில் நடிக்க யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் நயன்தாரா அடுத்த நடிக்க இருக்கிற பேய் படம் ஒன்றில் நகைச்சுவை நடிகராக யோகிபாபு நடிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாராம்.
ஏற்கனவே யோகி பாபுவின் கால்ஷீட் டைரி பல பட வாய்ப்புகளால் நிரம்பி வழிந்தாலும், நயன்தாராவுக்காக சரிதான் சொல்லியுள்ளாராம் யோகிபாபு.

No comments

Powered by Blogger.