பிரியங்கா சோப்ராவின் காதலன் யார் தெரியுமா?

இளம் வயது பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை பிரபல மூத்த நடிகை பிரியங்கா சோப்ரா காதலித்து வருகிறார்.


நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய்யுடன் "தமிழன்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, அமெரிக்க இளம் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வருவதாக கூறினார். மேலும் அவர்கள் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக நேற்று மாலை மும்பை விமான நிலையம் வந்திறங்கினர். அது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றுமின்றி ரசிகர்களுக்கும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா மும்பை வெர்ஷவா பகுதியில் 100 கோடிக்கு ஒரு பங்களா வாங்கியுள்ளார். அந்த புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் நடக்கவுள்ளது. அதற்காக பிரியங்காவும், நிக் ஜோன்ஸும் ஜோடியாக வந்துள்ளதாக தெரிகிறது.
Powered by Blogger.