சம்பந்தனுக்க அதிர்ச்சி கொடுத்த கட்ச்சியொருவரான சட்டத்தரனியுமானவர் ரனிலுடன் கைகோர்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்வது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சட்ட வல்லுநர் எனவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அதன் சட்டப் பிரிவுக்கு பொறுப்பாக செயற்படுமாறு இவருக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் அடுத்த தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மறுசீரமைப்புகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது இது குறித்து அவர் கூறியுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சற்று பின்நோக்கி தள்ளப்பட்டதாகவும் அந்த நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்ததுதம் சம்பந்தன் செய்வதறியாது தடுமாறுவதாகவும் இது விடயமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.