கைதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாமர இந்திரஜித், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.


சந்தேகநபரால் மறைத்து வைக்கப்பட்ட பொதியொன்றைத் தேடுவதற்காக மாத்தறை கிரலகெல பகுதிக்கு சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது சந்கேநபர், குறித்த பொதியில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டை பொலிஸார் மீது வீசிய சந்தர்ப்பத்தில், பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சந்தேகநபரை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வேளையில், அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சாமர இந்திரஜித் எனும் குறித்த சந்தேகநபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடனும் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.