ஆகஸ்டில் அண்ணனுக்கு ஜே போட வரும் தினேஷ்!

அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். இப்படத்தை தொடர்ந்து ‘குக்கூ’, ‘திருடன் காவல் துறை’, ‘விசாரணை’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் தினேஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அரோல் கொரேலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ராஜ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். 
தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இப்படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் 20 சென்சுரி பாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஆகஸ்டு 17ம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.