ரஜினி படத்தில் மேகா ஆகாஷ்!

லீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த சென்னை பொண்ணு மேகா ஆகாஷ். அதன் பிறகு ஒரு பக்க கதை என்ற
படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கம், தனுஷ் ஹீரோ என பெரிய பிளாட்பார்ம் கிடைத்தது. ஆனால் மேகாவின் துரதிர்ஷ்டம் இரண்டு படங்களுமே தள்ளிப்போனது. இதனால் மனம் தளர்ந்திருந்த மேகாவுக்கு இப்போது புதிய உற்சாகம் கிடைத்திருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜனி நடிக்க இருக்கும் படத்தில் மேகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜியின் மகனாக பாபி சிம்ஹாவும், சனந்த் ஷெட்டியும் நடிக்கிறார்கள். இதில் சனந்த் ஷெட்டி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ஆனால் இந்த தகவலை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
Powered by Blogger.