நக்சல் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப்பல்லியில்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆடுகள் மேய்ந்தபோது வெடிகுண்டுகள் வெடித்து 2 வெள்ளாடுகள் பலியானது. மேலும், வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினரும், வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள துருகம் காப்புக்காடுகள், ஆந்திர மாநில காப்புக்காடுகளை ஒட்டி இருப்பதால், தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தேடுதல் வேட்டையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டனர். ஆம்பூரான் பண்டை, சாணி கணவாய், தொம்மர் குட்டை, தேன்கல் கானாறு, சேஷவன் கிணறு, சின்னதுருகம், பெரியதுருகம் எர்ரகுண்டா வழியாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பொதுமக்களிடம், `வனப்பகுதியிலோ அல்லது வனத்தை ஒட்டி உள்ள பகுதியிலோ சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் காணப்பட்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.
Powered by Blogger.