தமிழ் இளைஞர்களை காணாமலாக்கிய அதிகாரிக்கு முக்கிய பதவி!

தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கின் சந்தேகநபரான சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவிற்கு, இலங்கை இராணுவ தலைமையகத்தின், காலாட்படை பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது, 24 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களில் மூவர் தொடர்பாகவே, யாழ். மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இவர் இராணுவத்தின் காலாட்படை பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.