குழந்தைகள் இலக்கிய முன்னோடி பாவலர் ம.இலெ.தங்கப்பா மறைவு.!

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞரும் மொழிப்பெயர்ப்பாளரும்,
குழந்தைகள் இலக்கிய முன்னோடியுமான பாவலர் ம.இலெ.தங்கப்பா நேற்று நள்ளிரவில் காலமானார். புதுவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர் தங்கப்பா. இவரது 'ஆந்தைப்பாட்டு' மிக முக்கியமான பகடி இலக்கியமாகும்.

இவரது ‘LOVE STANDS A LONE' என்ற மொழிபெயர்ப்பு நூல், சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில பெயர்ப்பாகும். அவர் எழுதியுள்ள நூல்களில் இயற்கை ஆற்றுப்படை, எது வாழ்க்கை?, கொடுத்ததே வாழ்க்கை ஆகியவை மிகவும் குடிறப்பிடத்தக்கவையாகும்.
குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய அகாதெமி விருதினை இருமுறைப் பெற்றுள்ளார் தஙகப்பா. வேலூர் இலக்கியப் பேரவை வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான
விருதையும் தங்கப்பா பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்ப் போராளி, தமிழினக் காப்பாளர், பேராசிரியர் இலெனின் தங்கப்பா அவர்களின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
Powered by Blogger.