சிறகுகள் உந்தி எழுந்து பிரபஞ்சத்தை வலம் வரட்டும்.!

சிறகுகள் உந்தி எழுந்து
பிரபஞ்சத்தை வலம் வரட்டும்..!

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

இனியவளே...!
அதிசயங்களை அணிந்து
அவதரித்த படைப்பு நீ.
கண்களால் கண்டறியும்
படைப்புக் கடவுள் நீ.

என்ன சாதித்தாய் என
ஊர் உன்னைக் கேலி செய்தால்
உதரத்தை( வயிற்றை) தடவி தலை நிமிர்.
உலக உற்பத்தியை நிர்ணயிப்பவள் நீ.

சாதிக்கப் பிறந்தவள் நீ
சாதித்துக் காட்டிய வல்லரசி நீ.
உன்னைச் சூழ்ந்த அரக்கரின்
உதிரிழைச் சொற்களுக்காய் வருந்தாதே.!
குரைக்கும் நாய்களுக்கு கல்லெடுத்தால்
சிறக்காது சாதனைப் பயணம்.

ஆற்றல் அரசி நீ. அறிவுக் களஞ்சியம்  நீ.
ஏற்றும் சுடராய் எழுந்தாடும் கவித்துவம் நீ.
சமூகச் சிந்தனைச் சிறகு முளைத்த
சுதந்திரப் பறவை நீ.
வெட்டிக்கதைகளை வேரோடு அணைக்காதே
கெட்டித் தனங்கள் கெட்டுப் போயிடும்.
கூண்டுகள் பாதுகாப்புக்கு மட்டுமே.
குந்தியிருந்து குடல் நிரப்ப அல்ல.

திட்டமிடலும் திகட்டும் ரசணையும்
வட்டத்துக்குள் வாழ்வோர்க்கு
வராத கலை காண்.
குண்டஞ்சட்டிக் குதிரைகளை
குப்பைக்குள் தூக்கி எறி.
வேர்களை நாசம் செய்யும்
உழுவான்கள் ஆபத்தானவை.

அன்பை அடிமை சாசனமாய் கருதும்
அந்நிய மனங்களை கண்டுணர்- உன்
சிறகுகள் உந்தி எழுந்து
பிரபஞ்சத்தை வலம் வரட்டும். உன்
சாதனை படையலை ருசிக்க
காத்திருக்கிறேன் முழுமனதோடு....🌹

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Powered by Blogger.