ஜொகூர் குடிநுழைவு அதிகாரிகளைக் கண்காணிக்க கேமராக்கள்!

ஜொகூர் மாநில அரசாங்கம் குடிநுழைவு அதிகாரிகளின் ஒழுங்கற்ற நடத்தையைக் கண்காணிக்க கேமராக்களைப் பொருத்தவுள்ளது.


ஜொகூர் பாருவின் CIQ வளாகத்தில் அவை நிறுவப்படும். அதே நேரத்தில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் வேலை நேரத்தில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தியதாகவும், வேலைக்குத் தாமதமாக வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

அது போன்ற சம்பவங்களை முறியடிக்க புதிய நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Powered by Blogger.