தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்சனைக்கு தீர்வு!

தபால் ஊழியர்களின் பிரச்சனைக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு காண முடியும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக தபால்துறை

அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் செயலாளர், சம்பள ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.அமைச்சரவையின் துணைக்குழுவுக்கு அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சின் செயலாளர் கூறினார்.
Powered by Blogger.