சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்!

சிங்கப்பூர் உடன்படிக்கை சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக தொழிலாளர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.


அந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

அமைச்சரவையையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தி இந்த உடன்படிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 
Powered by Blogger.