தேசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியில் விலகினார் ஸ்கூலிங்!

ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், சிங்கப்பூர் தேசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியின் ஐம்பது மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.


சற்று முன் நடைபெற்ற போட்டியின் வெற்றியாளர் தியோங் சென் வெய்.

22.52 விநாடிகளில் முடித்து முதல் இடத்தைப் பிடித்தார் 21 வயது தியொங்.

அதற்கு முன்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிவிட்டதால் இறுதிப் போட்டியிலிருந்து ஸ்கூலிங் விலகிக் கொள்வார் என்று சிங்கப்பூர் நீச்சல் சங்கம் அறிவித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஸ்கூலிங்கைத் தயார்ப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதி அது.

No comments

Powered by Blogger.