ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை காணவில்லை!

அம்பலந்தொட, ரிதியகம, 5 ஆம் கட்டை பகுதியில் வளவை ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.

ரிதியகம, பொலியர்வத்த பகுதியை சேர்ந்த 10 வயதுடைய எம்.பீ நெத்மின நிர்மான எனும் சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

இன்று (21) பிற்பகல் கல்தொடுபல பகுதியில் குளிக்க சென்ற போது குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் பெற்றோர் அம்பலந்தொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.No comments

Powered by Blogger.