மயிலிட்டித் துறைமுகத்தில் எரிகிறது கப்பல்.

மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிட்டிருந்த கப்பல் தீ பற்றிக்கொண்டுள்ளது.


  இச் சம்பவம் அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து கடற்படையின் தீ அணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர முயன்ற போதும் கப்பலின் இயந்திர பகுதி  கடுமையாக தீ பற்றி கொண்டுள்ளது. அக்கப்பலில் டீசல் தாங்கி எரிவாயு என்பன உள்ளதாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமையாலும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் நிலவுகிறது.

இந்தக் கப்பல் தனியார் ஒருவருக்கு சொந்தமானதாகவும்  சீமெந்து ஏற்றிவர பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது. இந்தக் கப்பல் கடந்த ஒரு வருடகாலமாக திருத்த வேலை காரணமாக


நங்கூரம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.