ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிய இலங்கை தம்பதிகளின் மணு நிராகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் குடும்பத்தின் கோரிக்கையை அந்த நாட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் பிலோல பகுதியில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தினர் தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பெடரல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா, 2 வயதுப் பெண் குழந்தை கோபிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தனர்.

இறுதி நேரத்தில் வானூர்தியில் இருந்து இறக்கப்பட்ட அவர்கள், ஆஸ்திரேலியாவில் தற்காலிகமான தங்க வைக்கப்பட்டனர்.

அந்த நாட்டு எல்லைப்படையினரும், பொலிஸாரும் அந்தக் குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்து வைத்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இந்த தம்பதினியர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் இணைப்பு நுழைவிசைவில் பிலோல பகுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி பிரியாவின் இணைப்பு நுழைவிசைவு முடிவடைந்த தருவாயில் தனது நுழைவிசைவைப் புதுப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் திடீரென அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் இறுதியில் அவர்கள் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் தொடர்ந்துஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவர்களினால் விண்ணப்பித்த விண்ணப்பத்தை அந்தநாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.