பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையர்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் நாடுகடத்தலை எதிர்நோக்கியிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.பிரித்தானியா - Worcester பகுதியில் சிறுவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஹேமக பத்திரனகே என்பவரே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

குறித்த நபர் போதியளவு பணம் சம்பாதிக்கவில்லை என காரணம் காட்டி நாடுகடத்தலை எதிர் நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாவிற்கு தகுதி பெற 30,000 யூரோக்களை ஹேமக பத்திரனகே ஆண்டுதோறும் சம்பாதிக்க வேண்டும்.
27 வயதான குறித்த நபர் மனித உரிமைகள் மைதானத்தில் தங்கியிருப்பதற்கு உள்துறை அலுவலகத்திற்கு முறையிட்டார். எனினும், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேமக பத்திரனகே பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.