யாழில் காவல்துறையின் நாடகம்??விபத்தில் தப்பிய ஆவா குழுவாம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் துரத்தப்பட்டு வந்த இரு இளைஞர்கள் சிலர் காருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.அவர்கள் தமது மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர்.துரத்தி வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளயுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவா குழு என்கின்றனர் பொலிஸார்.அவர்களைத் துரத்தி வந்தபோது அவர்கள் காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Powered by Blogger.