காதர் மஸ்தானின் அமைச்சுப் பதவி அதிரடியாக நீக்கம்!

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கிய விடயமானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு சமகால அரசியல் தொடர்பாகவும் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ள

நிலையில், இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானிடம் இருந்து நீக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்பட்ட அமைச்சுகளுக்கான வர்த்தமானி அறிவிப்பில் காதர் மஸ்தானினது பிரதியமைச்சு பொறுப்பில் மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வளிப்பு ஆகியன மாத்திரமே உள்ளடங்கும் எனவும் இந்து விவகார பிரதியமைச்சு அகற்றப்படும் எனவும் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயமானது ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலமாக நாட்டில் ஏற்பட்ட குறித்த அமைச்சு பதவி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவி அடுத்து யாருக்கு வழங்கப்படும் என்பது இது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.