போக்குவரத்து மத்திய நிலையமாக மாறும் புறக்கோட்டை!

புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றும் முயற்சிக்குரிய முன் சாத்தியக்கூறு ஆய்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முயற்சிக்காக பிரெஞ்சு அரசாங்கம் பத்து இலட்சம் டொலரை முதலீடு செய்கிறது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை வெளியிட்டு, செய்தியாளர் மத்தியில் விளக்கம் அளிக்கும் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டையை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதன் மூலம் கொழும்பிலும், சுற்றுப்புறக்களிலும் வாகன நெரிசல் குறையும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.