வியட்நாமில் இணையக் காற்பந்துச் சூதாட்டத் தளம் முறியடிப்பு!

வியட்நாமில், 26 மில்லியன் டாலர் மதிப்புள்ள இணையக் காற்பந்துச் சூதாட்டத் தளத்தை நடத்திய நான்கு சந்தேக நபர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


வியட்நாம் குடிமக்கள், அரசாங்க லாட்டரியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

அங்குள்ள சில சூதாட்டக் கூடங்களில், வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதியுண்டு.

ஆகவே, வியட்நாமில் சட்ட விரோத சூதாட்டக் கூடங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதிலும் உலகக் கிண்ணக் காற்பந்து போன்ற அனைத்துலகப் போட்டிகள் நடைபெறும் வேளையில், இணையம் வழி நடத்தப்படும் சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரிப்பது அங்கு சாதாரணம்.

ஹோ சி மின் நகரில் கைதான 4 சந்தேக நபர்கள், தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதை ஏற்று நடத்துவோருக்கும் வியட்நாமியச் சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
Powered by Blogger.