மகாவலி ஆற்றில் வெளிநாட்டவர்கள் பயணித்த படகு விபத்து!

மகாவலி ஆற்றின் கட்டுகஸ்தொட்ட – குஹாகொட பகுதியில் படகு சரிந்ததில் அதில் பயணம் செய்த 7 பேரில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சுற்றுலாப்பயணிகள் சவுதி அரேபியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மகாவலி ஆற்றில் பயணித்த படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.