பறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா?

அமெ­ரிக்­கக் குடி­ம­கன் என்ற காரணத்­தால் தேர்­த­லில் கள­மி­றங்­குவது தொடர்­பில் எந்­தச் சட்டச் சிக்­க­லும் இல்லை. எனக்கு எந்­தத் தடை­யும் இல்லை. அமெ ரிக்கா அவ்­வா­றான கருத்­துக்­க ளைக் கூறி­ய­தாக உறு­தியான தக வல்­க­ளும் இல்லை.
இவ்­வாறு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்­தார்.
கொழும்­பில் அவ­ரைச் சந்­தித்த பிர­மு­கர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லில் அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது-
அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை உள்ள கார­ணத்­தால் என்­னால் தேர்­த­லில் கள­மி­றங்க முடி­யாது என்ற கருத்து தவ­றா­னது. அதற்­கான தடை­கள் எவை­யும் இல்லை. அமெ­ரிக்­கா­வும் அவ்­வா­றான கருத்­துக்­களை கூறி­ய­தாக உறு­தி­யான தக­வல்­கள் எவை­யும் இல்லை. ஊட­கங்­க­ளில் சில மாறு­பட்ட கருத்­துக்­கள் எழு­கின்­றன. ஆனால் அவற்றை பொருட்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை.
எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்டு அர­ச­த­லை­வர் தேர்­த­லில் நான் கள­மி­றங்­கு­வது அவ­சி­யம் என்­றால் தேர்­த­லில் போட்­டி­யிட எந்­தச் சிக்­க­லும் வரப்­போ­வ­தில்லை. நான் கள­மி­றங்க வேண்­டுமா? இல்­லையா? அல்­லது வேறு ஒரு­வர் கள­மி­றக்­கப்­ப­டு­வாரா? என்­பதை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவே தீர்­மா­னிக்க வேண்­டும்.
இன்­ன­மும் அதற்­கான நேரம் ஏற்­ப­ட­வில்லை. நாம் பொரு­ளா­தார ரீதி­யாக அடுத்த இலக்­கு­கள் குறித்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. அடுத்து அமை­ய­வுள்ள எமது ஆட்­சி­யில் பல­மான பொரு­ளா­தார கொள்­கை­களை முன்­னெ­டுத்து செல்ல வேண்­டிய தேவை உள்­ளது. அந்த இலக்­கில் நாம் சரி­யாக சென்­ற­டைய வேண்­டும்.
நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை போன்று சிவில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும். இன்று நாட்­டின் நில­மை­கள் மிக­வும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளன. பாதாள உல­கக் குழுக்­க­ளின் செயற்­பா­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன. மக்­கள் வீதி­க­ளில் நட­மா­ட­வும் அஞ்­சு­கின்­ற­னர். எமது ஆட்­சி­யில் மக்­க­ளின் சுதந்­தி­ரத்தை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தோம்.
இன்று ஒரு­பு­றம் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. மறு­பு­றம் மக்­க­ளின் பாது­காப்பு அச்­சத்­தில் உள்­ளது. இந்த அரசு இவை அனைத்­துக்­கும் பொறுப்­பு­கூற வேண்­டி­யுள்­ளது. இரண்டு கட்­சி­க­ளும் இணைந்து ஆட்சி நடத்­தி­யும் நாட்­டில் சட்­டம் ஒழுங்கை நிலை­நாட்ட முடி­ய­வில்லை. ஆளுமை இல்­லாத தலை­மை­கள் ஆட்­சிக்கு வந்­தால் ஏற்­ப­டும் நிலமை இது­வா­கவே அமை­யும்.
இப்­போது மக்­கள் எம்மை சந்­தித்து பேசு­கை­யில் மீண்­டும் சரி­யான மாற்­றம் ஒன்றை உரு­வாக்க முன்­வர வேண்­டும் என்ற கார­ணத்­தையே கூறு­கின்­ற­னர். நாம் மக்­க­ளுக்கு எடுத்­து­ரைக்க முன்­னர் மக்­கள் எமக்கு பல விட­யங்­களை கூறு­கின்­ற­னர். 2020ஆம் ஆண்டு சரி­யான தெரி­வு­களை நோக்கி மக்­கள் பய­ணிக்க வேண்­டும் – என்­றார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.