வருகின்ற தேர்தலில் மைத்­தி­ரியை மீண்­டும் துமிந்த சப­தம்!

2020 ஆம் ஆண்டு நடை­பெ­றும் அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­பெற்று மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்­டும் அரி­ய­ணை­யே­ற­வேண்­டும் என்­பதே எமது இலக்­கா­கும்.இவ்­வாறு தெரி­வித்­தார் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேசிய அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்க.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் இடைக்­கால நிர்­வா­கக்­கு­ழு­வின் பொதுச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட் டுள்ள பேரா­சி­ரி­யர் ரோஹண லக்ஷ்­மன் பிய­தா­ஸ­வும், தேசிய அமைப்­பா­ள­ரா­கத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்­க­வும் நேற்று முற்­ப­கல் கட்சி தலை­மை­ய­கத்­தில் தமது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­ற­னர்.

அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளி­டம் கருத்து வெளி­யிட்­ட­போதே துமிந்த திஸா­நா­யக்க இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது-,

உட்­கட்சி மோதல் வலுத்­த­தால் இரண்டு, மூன்­றா­கப் பிரிந்து மோதிக்­கொண்டு சுதந்­தி­ரக் கட்சி அழிந்­து­வி­டும் என்றே சிலர் வழி மீது விழி வைத்­துக் காத்­தி­ருந்­த­னர். ஆனால் சுதந்­தி­ரக் கட்சி அவ்­வா­றான கட்­சி­யல்ல என்­பதை நிரூ­பித்­துள்­ளோம்.

இந்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள மாகாண சபைத் தேர்­த­லில் வெற்­றி­பெ­று­வ­தும், 2020இல் நடை­பெ­ற­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மீண்­டும் வெற்­றி­வாகை சூட­வைப்­ப­தும், பொதுத் தேர்­த­லில் வெற்­றி­நடை போடு­வ­துமே எமது பிர­தான நோக்­கங்­க­ளா­கும்.- -­என்­றார்.

கட்­சி­யின் புதிய பொதுச் செய­லா­ளர் ரோஹண லக்ஷ்­மன் பிய­தா­ஸ­வும் கருத்து வெளி­யிட்­டார்.

“மக்­க­ளின் இத­யம் அறிந்த கட்­சியே சுதந்­தி­ரக் கட்சி. குறு­கில காலத்­தில் கீழ்­மட்­டம்­மு­தல் மேல்­மட்­டம்­வரை மறு­சீ­ர­மைப்பு இடம்­பெ­றும். கட்­சியை வெற்­றி­பாதை நோக்கி அழைத்­துச்­செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.”- என்று அவர் கூறி­னார்.

அதே­வேளை, அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ள சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 பேர் கொண்ட அணி­யி­லுள்ள ஜோன் சென­வி­ரட்ன, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸா­நா­யக்க ஆகி­யோர் நேற்று கட்­சித் தலை­மை­ய­கம் சென்று புதிய செய­லா­ளரை வாழ்த்­தி­யுள்­ள­னர். 

No comments

Powered by Blogger.