தபால் ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்குத்
திரும்புமாறு தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
தபால் தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானது என தபால் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் கோரிக்கைகளின் பிரகாரம், அடுத்த மாதத்திற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் ஊழியர்கள் இன்று 6 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக வௌிநாட்டு கடிதங்கள் அடங்கிய சுமார் 1000 பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.