கிளிநொச்சியில் புகுந்தது சிறுத்தைப்புலி..!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.
அம்பாள்குளம் விவேகானந்த  வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
            சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தையை மயக்கிப் பிடிக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டுவராமையால், இதற்கிடையில் எட்டு பேரை  சிறுத்தை தாக்கியிருந்தது. அதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியையும் சிறுத்தை தாக்கியது.

இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டப்பட்டது.இதனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் அங்கிருந்து அகன்றனர்.

எனவே கிராம மக்கள் பொல்லுகளுடன் சிறுத்தையை சுற்றி வளைத்துத் தாக்கிக் கொன்றனர்.சம்பவ இடத்தில்  கிளிநொச்சிபொலீஸார், கிராம அலுவலர் உட்பட பலர்


இருந்தனர்.
இன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்

No comments

Powered by Blogger.