முக­நூ­லில் அறி­மு­க­மாகி மோசடி நேரில் மடக்­கிய நோர்வே பெண்

முக­நூல் ஊடாக வெளி­நாட்டுப் பெண்­ணி­டம் பண மோசடி செய்­தார் என்று
குற்­றஞ்­சாட்­டப்­பட்டு முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். அவரை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு முல்­லைத்­தீவு நீதி­மன்று நேற்று உத்­த­ர­விட்­டது.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இருந்து முக­நூல் ஊடாக நோர்வே நாட்­டுப் பெண் ஒரு­வரை நண்­பி­யாக இணைத்து அவ­ரி­டம் நூதன முறை­யில் 32 இலட்­சம் ரூபா பணத்தை மேசடி செய்­தார் என்று அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.
பணத்தை இழந்த பெண் நோர்­வே­யில் இருந்து இலங்கை வந்து முல்­லைத்­தீவு மாவட்­டப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­தார். பொலி­ஸா­ரின் ஆலோ­ச­னைப்­படி மாவட்ட சிறப்பு குற்ற விசா­ர­ணைப் பிரிவு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.
முல்­லைத்­தீவு மல்­லாவி பிர­தே­சத்­தில் அந்த நபர் இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுக் கைது செய்­யப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கைது செய்­யப்­பட்­ட­வர் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.