பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட இலக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என வடக்கு மாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இன்று ‘விசேட தேவையுடைய சிறுவர் வாழ்வியலில் யோகா முறையின் – சுதேச மருத்துவ துறையின் வகிபாகம்’ எனும் தொணிப்பொருளில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் அதிகளவிலான விசேட தேவையுடையோர் வாழ்கின்றனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். அவர்களில் அதிகமானோர் செல் மற்றும் சூட்டு காயங்களால் விசேட தேவையுடையோர் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இவ்வாறானவர்களிற்கு மாகாணம் தழுவிய ரீதியில் இவ்வாறான யோகா பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதேபோன்று வட மாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக, எனது இலக்கம் மற்றும் பொலிஸ் இலக்கம் பொறிக்கப்பட்ட விசேட துண்டு பிரசுரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.