காவல்த்தறை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க எத்தனித்தவர் கைது!

கொழும்பு- மோதர, ரன்திய உயன பகுதியில் பொலிஸ்
அதிகாரியொருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முற்பட்டவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 30 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை   விடுதலை செய்யுமாறு கூறி அவரது உறவினர் 1 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து  இலஞ்சம் வழங்க முற்பட்டவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்விருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 
Powered by Blogger.