கைதிகளின் சுயசரிதையை எழுதும் குட்டி பத்மினி!

நடிகரும், இயக்குனருமான குட்டி பத்மினி, சிறைக் கைதிகளின் வாழ்க்கையைச்

சுயசரிதையாக எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி உட்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
நல்ல திறமையான நடிகையான இவர் ‘பைரவி’ உட்பட பல சின்னத்திரை சீரியல்கள் தயாரித்துள்ளார்.
தற்போது இவர் சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.
கைதிகளின் வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதியிருக்கிறார். அதை தன் மறைவிற்கு பிறகு புத்தகமாக வெளியிட வேண்டும் என தன் மகளிடம் கூறியிருக்கிறார்.
Powered by Blogger.