ஒரே நாளில் தகர்ந்த உலக சாதனை!

இங்கிலாந்தில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து பெண்கள் அணி படைத்த உலக சாதனையை அடுத்த சில மணி

நேரங்களிலேயே முறியடித்துள்ளது இங்கிலாந்து பெண்கள் அணி.
இங்கிலாந்து- நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டவுண்டன் நகரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் வீராங்கனைகள் கேப்டன் சுஜி பேட்ஸ் (66 பந்தில் 124 ரன்கள்), சோஃபி டிவைன் (48 பந்தில் 73) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற உலக சாதனையைப் படைத்தது. இதற்கு முன் பெண்கள் டி20 வரலாற்றில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 209 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின் அடுத்த சில மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை டாமி பீமோண்ட் (52 பந்தில் 116 ரன்கள்), நதாலி ஸீவர் (15 பந்தில் 33 ரன்கள்), கேத்ரின் ப்ருன்ட் (16 பந்தில் 42 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்ரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 மட்டுமே எடுத்து, 121 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இம்மாத தொடக்கத்திலிருந்தே பெண்கள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. முதலில் நியூசிலாந்து அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் தொடரில் நியூசிலாந்து மகளிர் அணி 490 ரன்கள் படைத்தது உலக சாதனை படைத்தது. பின்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த அமெலியா கெர் ஒரே இன்னிங்ஸில் 232 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தார். தற்போது நியூசிலாந்து பெண்கள் அணி படைத்த உலக சாதனையை ஒரே நாளில் இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.
சாதனை வாரம்
செவ்வாய்கிழமை (ஜூன் 19)
50 ஓவரில் 481 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆண்கள் அணி உலக சாதனை படைத்தது.
புதன்கிழமை (ஜூன் 20)
20 ஓவரில் 250 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பெண்கள் அணி உலக சாதனை படைத்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.