மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி!

 
சென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியின் இறுதி சுற்ற்ய் நேற்று மும்பையில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியினை பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் மற்றும் நடிகர் அயுஷ்மான் கரனா தொகுத்து வழங்கினர். மேலும், நடுவர்கள் குழுவில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகர்கள் மலைகா அரோரா , பாபி டியோல் மற்றும் குனால் கபூர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 


இந்நிலையில், இறுதிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் வெற்றி பெற்று மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். இவர் ஏற்கனவே மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வெற்றது குறிப்பிடத்தக்கது.


அனுகிரீத்திக்கு உலக அழகியும்,  முன்னாள் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவருமான மனுஷி ஷில்லர் மகுடம் சூட்டினார். அதன் பின் இரண்டாவது, மூன்றாவது இடத்தை அரியானாவின் மீனாக்‌ஷி சவுத்ரி மற்றும் ஆந்திராவின் ஷ்ரேயா ராவ் காமவரப்பு பெற்றனர். அவர்களுக்கு ஷில்லர் மகுடம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Powered by Blogger.