அடுத்த டெஸ்ட்டில் ஆடுவது உறுதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான பார்படோஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சந்திமால் பந்தை சேதப்படுத்தினார் எனும் குற்றசாட்டுகள் நிமித்தம் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னர் அறிவித்திருந்தது.

ஆயினும் அதனை எதிர்த்து சந்திமால் மேன்முறையீடு செய்துள்ள காரணத்தால், அவருக்கு அடுத்த போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளது.

போட்டி நடுவர் ஜவகல் ஶ்ரீநாத் வழங்கிய தீர்ப்புக்களில் காணப்படும் முரண்பாட்டை சாதகமாகப் பயன்படுத்த சந்திமாலும் இலங்கை கிரிக்கெட் சபை வழக்கறிஞரும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அமைத்துள்ள விசேட குழுவின் விசாரணைகளின் பின்னர், சந்திமாலின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு போட்டித்தடை அமுலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.