அதிசய மீன் புறா தலையுடையுடன் சீனாவில்!

சீனாவில் புறா தலையுடன் அதிசய மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
சீனாவின் குயிஷோயி மாகாணத்தில் உள்ள குயாங் பகுதியில், மீனவர் ஒருவரின் வலையில் புறா போன்ற தலையுடன் கூடிய அதிசய மீன் ஒன்று சிக்கியது.

இதனைக் கண்ட அவர் உடனடியாக ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த மக்கள், இந்த அதிசய மீனை பார்ப்பதற்காக கூடினர்.

அதனைத் தொடர்ந்து, இந்த மீனை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

‘கிராஸ் கார்ப்’ என்று அழைக்கப்படும் இந்த வகை மீன்கள், நன்னீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை. மேலும், இவை ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் காணப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.