மாகா­ணத் தேர்­த­லுக்­காக பெரும் கூட்­டுக்கு முயற்சி

எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­தலை இலக்­கு­வைத்து முன்­னாள் அரச தலை
­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான மாபெ­ரும் கூட்­ட­ணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று பொது எதி­ர­ணி­யின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.
இந்த வருட இறு­திக்­குள் அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளில் அரசு கள­மி­றங்­கி­யுள்­ளது. ஏற்­க­னவே சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகாண சபை­க­ளின் ஆயுள்­கா­லம் கடந்த ஆண்டு செப்­ரெம்­பர் மாதத்­து­டன் நிறை­வ­டைந்­தி­ருந்­தது.
வடக்கு, ஊவா மற்­றும் மத்­திய மாகாண சபை­க­ளின் ஆயுள்­கா­ல­மும் செப்­ரெம்­பர் மாதத்­து­டன் நிறை­வுக்கு வரு­கின்­றது. இந்த ஆறு மாகாண சபை­க­ளு­டன் எஞ்­சி­யுள்ள மூன்று மாகாண சபை­க­ளுக்­கும் தேர்­தலை நடத்த அரசு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது.
புதிய தேர்­தல் முறை­மை­யில் மாகாண சபைத் தேர்­தலை ஆரம்­பத்­தில் நடத்த முனைப்­பு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் புதிய முறை­மை­யின்­கீழ் நடத்­தப்­பட்­ட­தால் ஏற்­பட்ட பல்­வேறு சிக்­கல்­கள் கார­ண­மாக பழைய முறை­மை­யின் கீழே மாகாண சபைத் தேர்­தலை நடத்­த­வேண்­டும் என்­ப­தில் அரசு உறு­தி­யா­க­வுள்­ளது.
மாகாண சபைத் தேர்­தலை இலக்­கு­வைத்து முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தலை­மை­யில் மாபெ­ரும் கூட்­ட­ணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சி­களை பொது எதி­ர­ணி­யி­னர் மேற்­கொண்­டுள்­ள­னர்.
பொது எதி­ர­ணி­யின் இந்­தக் கூட்­ட­ணி­யில் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யை­யும் இணைத்­துக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கையை எடுக்­க­வுள்­ளது தேசிய அர­சி­லி­ருந்து வெளி­யே­றிய 16 பேர் கொண்ட சு.கவின் குறூப்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் அதற்­குப் பச்­சைக்­கொடி காட்­டு­வார் என்­றும், விரை­வில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் பேச்சு ஆரம்­பிப்­ப­தற்­காக நகர்­வு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன என்­றும் பொது எதி­ர­ணி­யின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.