உரித்துக்களை பயன்படுத்த தவறினால், அதிகாரங்களை பயன்படுத்த ஏற்படும்!

பேருந்துகள் மக்களை ஏற்றுவதற்கான உரித்துக்களை சரியான முறையில் பயன்படுத்த தவறினால், அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வட மாகாண தனியார் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப் பத்திரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பேருந்து தரிப்பு நிலையங்களில் ஒரே தொகுதிகளில் தனியார் மற்றும் அரச பேருந்துகளை நேர அடிப்படையில் நிறுத்துவதற்கும், பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கும் உரித்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை அரச மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்குனர்கள் முறையாக பயன்படுத்த தவறுவார்களானால் அவற்றை நிறைவேற்றுவதற்காக சில மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்க நேரிடும்.

அவ்வாறான ஒரு நிலைக்கு எம்மை சகோதரர்கள் முன்தள்ள மாட்டார்கள் என்ற விடயத்தை நான் உறுதியாக நம்புகிறேன். அதேவேளை வடக்கிலிருந்து பிரயாணம் செய்பவர்களில் 99 வீதமானவர்கள் தமிழ் மக்களே.

அவர்கள் எமது உறவினர்கள். அவர்களை புறக்கணித்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாது பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 
Powered by Blogger.