மா்ம முடிச்சை அவிழ்ப்பாரா இரா.சம்மந்தன்?

வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தனது
ஆட்சிக்காலத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு ”முதலமைச்சா் பேசுகிறாா்” என் னும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

இந்த புத்தக வெளியீடு நாளை காலை 9.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப் புத்தக வெளியீட்டில்  எதிா்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் கலந்து கொள்ளவுள்ளாா்.

இதன்போது அண்மைக்காலமாக பேசப்பட்டுவரும் அடுத்த முதலமைச்சா் தொடா்பான சா்ச்சைக்கு தீா்வு கிடைக்கும் என  பல தரப்பினரு ம் எதிா்பாா்த்துள்ளனா்.

வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில் வடமாகாணத்திற்கான அடுத்த முதலமைச் சா் யாா்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு கருத்துக்கள் எழுந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில் நாளை முதலமைச்சருடைய நுால் வெளியீட்டுக் காக வரும் இரா.சம்மந்தன் பல கேள்விகளுக்கு பதிலளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.  
Powered by Blogger.