யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.


இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ்.குடாநாட்டின் மண்டைதீவு, மண்டைதீவு இலங்கைக் கடற்படை முகாம், அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், வேலணையின் ஒரு பகுதி, சோலாவத்தை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.