முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் புலிக்கொடியை சாட்டி மேலும் தொடரும் கைது!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் புலிக்கொடி, சீருடை மற்றும் கிளைமோர் குண்டு என்பவற்றுடன் கைதானவர்களில் மூன்றாவது சந்தேகநபர் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டம், ஒழுங்குகள் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மூன்றாவது சந்தேகநபர் முச்சக்கரவண்டி சாரதியையும், மற்றுமொருவரையும் இரவு நேரத்தில் பயணமொன்றுக்கு அழைத்து, கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்ததாக தகவலொன்றையும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணை பிரிவினரினால் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த சம்பவம் இடம்பெற்றபோது தப்பி சென்ற நபரை (மூன்றாவது சந்தேகநபரை) தேடி வட மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Powered by Blogger.