வெளிநாட்டவர்கள் இலங்கையில் செய்த சிரமதான பணி!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.


கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் ஆணையகத்தால் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டத்தில் கல்பிட்டிய சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கல்பிட்டிய விஜய கடற்படை அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்திற்கு உதவி வழங்கியுள்ளனர்.

உள்நாட்டவர்கள் தமது நாட்டை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்காத நிலையில், வெளிநாட்டவர்களின் செயற்பாடு பலரினாலும் பாராட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.