ஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தீ விபத்து!

ஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இழுவை வாகனம் தீப்பற்றியதில்,லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சேதமடைந்தது.


அந்தச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக விமான நிறுவனம் குறிப்பிட்டது.

சம்பவம் நேர்ந்தபோது விமானத்தில் யாருமில்லை எனவும், விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னமும் தெரியவில்லை எனவும் அந்த விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இழுவை வாகனத்தில் இருந்து விமானத்திற்குத் தீ பரவும் படங்கள் சமூக ஊடங்களில் பரவி வருகின்றன.

விபத்து நடக்கும்போது விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயல்பட்டதால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

விமானத்தின் முன்பகுதி சம்பவத்தில் சேதமடைந்தைப் படங்கள் காட்டின.
Powered by Blogger.