யாழில் மாணவிகள் துஷ்பிரயோத்த வகுப்பறைக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டையில் உள்ள தனியார் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரினால் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


இந்த சம்பவத்திற்கமைய நேற்று முன்தினம் குறித்த ஆசிரியருக்கு சொந்தமான வகுப்பறைக்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

தீயினால் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியரினால் மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவரது வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.No comments

Powered by Blogger.