முஸ்லிம்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர்!

கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டி உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள், முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.

எனினும், அது உண்மையில்லை. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.