ஆயுதக் களைவு குறித்த ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு!

ஆயுதக்களைவு பிரகடனம் தொடர்பான, ஜெனிவாவுக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நொபுஷிகே தகாமிசாவா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.


கடந்த திங்கட்கிழமை கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, ஆயுதக்களைவு விவகாரம் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா மற்றும் ஜப்பானிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Powered by Blogger.