யாழில் கவணிப்பார்யற்ற கடற்பகுதி அபிவிருத்தியும் கடற்றொழிலாளா் நலன்களும்!

கடற்கரை அபிவிருத்தியின்போது கடற்றொழிலாளர்களது தொழிலும் அவர்களது வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் வலியுறுத்தியுள்ளார்.


இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குள் இருக்கும் கடற்கரையோரங்களின் அபிவிருத்தி தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படவுள்ள கடற்கரையோர அபிவிருத்தி மற்றும் உல்லாச பயணிகளை கவரும் வகையிலான செயற்றிட்டங்களின்போது குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்களது தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் இப்பகுதிகளை அண்டி வாழும் மக்கள் பலர் குறித்த கடற்பகுதிகளில் மேற்கொள்ளும் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்

தற்போது முன்னெடுக்கப்படவுள்ள கடற்கரை அபிவிருத்தி முயற்சிகள் இவ்வாறான தொழில்துறைகளை எந்தவகையிலும் பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதனூடாகவே மாநகரின் அபிவிருத்தியை மட்டுமல்லாது எமது பகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார். 
Powered by Blogger.