கண்டத்திலிருந்து தப்பித்த பட்லர்!

பேட்டில் கெட்ட வார்த்தை எழுதியிருந்த விவகாரத்தில் தண்டனையிலிருந்து ஜோஸ் பட்லர் தப்பித்துள்ளார்.


இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் டெஸ்ட் தொடர் நடந்தது. இதன் 2 ஆவது போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தனது பேட்டில் ‘f* it’ என சர்ச்சைக்குரிய வகையில் வாசகம் எழுதியிருக்க அது பல விமர்சனங்களுக்கு ஆளானது.

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஐசிசி சமீப காலமாக கடுமையாகவே தண்டனைகளை வழங்கி வருவதால் இவ்விவகாரத்தில் பட்லருக்கும் தண்டனை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவ்விவகாரத்தை விசாரித்த ஐசிசி, “விதிமுறைப்படி, ஆடை மற்றும் இதர பொருட்களில் ஒரு சமூகத்தை தாக்கும் விதமாகவோ, ஒருகுறிப்பிட நபரை இழிவு படுத்துகிற விதமாகவோ தவறான விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாகவோதான் இருக்க கூடாது. தற்போது அவர் எழுதியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து .இதில் நடவடிக்கை எடுக்க ஏதும் இல்லை” எனக் கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பட்லர், “ அணியில் ரொம்ப நாட்களுக்குப் பின்னர் இடம்பிடித்து இருக்கிறேன். எனக்கு தற்போது ஊக்கம் தேவைப்படுகிறது. எனவே என்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவே அந்த வாசகத்தை பேட்டில் எழுதியிருந்தேன். மற்றபடி எந்தத் தவறான நோக்கமும் இல்லை. இந்தச்செயல் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்" எனக் கூறியுள்ளார்.

Powered by Blogger.